கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கோர விபத்து நடந்தது. செல்வராஜ், சாந்தா தம்பதியினர் சமீபத்தில் புதிய வீடு கட்டினர். புதுமனை புகுவிழாவுக்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்குவதற்காக ஸ்கூட்டரில் இருவரும் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில், மனைவி கண்முன்னே செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாந்தா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.