மனைவியை குழிதோண்டி புதைத்த கணவன் (வீடியோ)

67பார்த்தது
கடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல் சுவேதா தம்பதி. ஹிடாச்சி வாகனம் ஓட்டும் சக்திவேல் சின்ன சேலம் பகுதியில் உள்ள ஏரியில் மண் அள்ளும் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று நடந்த சண்டையில் சுவேதாவை அடித்து கொன்று குழிதோண்டி புதைத்துள்ளார். பின்னர் சுவேதாவின் சகோதரருக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறிவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் அறிந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24 x 7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி