பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்... பகீர் வீடியோ...

50பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பகுதியில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்தில் பயணித்த பெண் கம்பிகளை பிடிக்காமல் கையில் இருந்த பையை திறந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கீழே விழுந்த பெண்ணின் தலையில் பலமாக அடிபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து, பலத்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: நியூஸ்தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி