மத்திய அமைச்சர் பதவி.. அண்ணாமலை மறுப்பு

564பார்த்தது
மத்திய அமைச்சர் பதவி.. அண்ணாமலை மறுப்பு
பிரதமர் மோடியுடன் பாஜக கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அவர்களை போல தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி