ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்... பகீர் வீடியோ...

62பார்த்தது
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27-வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படும்போதே, அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட விமான நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது.