இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் A போட்டி இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நியூயார்க் நேரப்படி காலை 10:30-க்கு துவங்க உள்ளது. அந்த நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி 10 மணி முதல் 12 மணி வரை 45 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மணி முதல் 2 மணி வரை 20 முதல் 35 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.