ஓசோன் படலத்தின் சிதைவுக்கு நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் தான் காரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. மனிதனால் உருவாக்கப்பட்ட மெத்தில் ப்ரோமைடு, மெத்தில் குளோரோஃபார்ம், கார்பன் டெட்ரோ குளோரைடு மற்றும் ஹாலோன்கள், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் குளோரோஃப்ளோரோ கார்பன்கள் மற்றும் ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் ஆகிய ரசாயனங்களின் குடும்பங்களே காரணம் என நிரூபணமாகி உள்ளது.