கீரைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. கீரைகளைச் சமைக்கும்போது அவற்றிலுள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சில அத்தியாவசிய சத்துக்கள் இழக்கப்படும். ஆவியில் வேகவைப்பதன் மூலம் கீரைகளில் உள்ள ஊட்டச் சத்துகளை ஓரளவு தக்கவைக்க முடியும். துளி உப்பு சேர்த்த சிறிதளவு வெந்நீரில் கீரைகளைச் சமைக்கலாம். கீரையின் நிறத்தை தக்கவைக்க, சமைக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். ஸ்டிர் ஃப்ரை முறையில் சமைப்பதும் பலன் தரும்.