பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைக்கவில்லை என குஷ்பு குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நடிகை குஷ்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து எனக்கு தெரியாது. கட்சி நிகழ்ச்சிக்கு யாரை அழைக்க வேண்டும் என முடிவெடுப்பது கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்தின் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.