கேரளம்: இடுக்கியை சேர்ந்த அமர் இலாஹி (23) நேற்று (டிச. 29) தனது நண்பர் மன்சூர் என்பவருடன் தேக்கு மரத்தோட்டத்தில் இருந்த போது 2 காட்டு யானைகள் இருவரையும் துரத்தியதால் அவர்கள் ஓடினார்கள். அதில் ஒரு யானை தாக்கியதில் அமர் படுகாயமடைந்து பின்னர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையில் வன விலங்குகளின் தாக்குதல்களை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் ரோஷி தெரிவித்தார்.