சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியைச் சந்தித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று காலை இந்த விவகாரம் தொர்பாக, பெண்களுக்கான விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.