எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். சிடாமா பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர்கள், பின்னர் வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.