ஒரே மாதத்தில் இரண்டு முறை அமாவாசை வருவது கருப்பு நிலவு (Black Moon) என அழைக்கப்படுகிறது. அதன்படி, இன்று (டிச. 30) மாலை சுமார் 5:27 மணியளவில் கருப்பு நிலவு எனப்படும் அரிய வானிலை நிகழ்வு நிகழவுள்ளது. 2024-ஆம் ஆண்டின் இறுதியில் நிகழும் அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் வழக்கமான அமாவாசைகளை போலவே இன்றும் நிலவு நம் கண்களுக்கு தென்படாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.