108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று (டிச.30) கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நாட்களில் பகல் பத்து, இராப்பத்து என உற்சவர் கோயிலின் பல மண்டபங்களில் எழுந்தருள்வார். இதற்காக கோயிலின் ஆயிரல்கால் மண்டபம், மணல் வெளி, கோபுரங்கள் ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.