மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிங்ராலி மாவட்டம் கசார் கிராமத்தில் இன்று (ஜூலை 29) மூன்று வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பிறந்த நாளன்று சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததால் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உறவினர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தற்போது, 18-20 அடி ஆழமுள்ள குழியில் குழந்தை சிக்கி உள்ளது.