வாவல் மீன்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள DHA மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்காமல் பாதுகாக்கும். DHA வேதிப் பொருள் மூளையை பாதுகாப்பதோடு, கண் பார்வையை அதிகரிக்கிறது மற்றும் கூர்மையாக்குகிறது. இதில் இருக்கும் கால்சியம் காரணமாக எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. மூட்டு வலிகள் குறைகின்றன. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.