கோவை மாநகராட்சி உடையாம்பாளையம் பகுதியில் தம்பதியர் சாலையோர உணவகம் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையில் பீப் பிரியாணியும் விற்பதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்களின் கடைக்கு வந்த சுப்ரமணி என்ற நபர், 'பீப் பிரியாணி போடாத.. நீ எவன வேணும்னாலும் கூப்பிட்டு கம்ப்ளைண்ட் கொடு' என மிரட்டும் தொணியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.