பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஆட்டோ அப்பளமாக நொறுங்கியது.