ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) கொரோனா வைரஸ் போன்று, மனிதர்களுக்குப் புதிய வைரஸ் கிடையாது. முதன்முதலில் இந்த வைரஸ் 2001-ல் நெதர்லாந்தில் உள்ள ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. "கொரோனா போன்ற பெருந்தொற்று நிலையை இந்த வைரஸ் உண்டாக்கும் வாய்ப்பு இப்போதைக்கு மிகக் குறைவு என்றும், இந்த வைரஸ் விசித்திரமானது என்றோ பயங்கரமானது என்றோ பயப்பட வேண்டாம்" என பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.