வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பம் வாங்க சில நாட்கள் உகந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய், வியாழன், வெள்ளி, தீபாவளி நாட்களில் துடைப்பம் வாங்கலாம். கிருஷ்ணபக்ஷத்தின் போதும் துடைப்பம் வாங்குவது மங்களகரமானது என்று சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிலபக்ஷ நாட்களில் துடைப்பம் வாங்கக்கூடாது. அது துரதிஷ்டமாக கருதப்படுகிறது. அதேபோல் திங்கட்கிழமை துடைப்பம் வாங்கினால் கடன் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.