பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா

84பார்த்தது
பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா
கேரளாவின் கொச்சி அருகே பொன்னுருண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர், குளியலறையில் உள்ள மின்விசிறியில் மொபைல் கேமரா வைக்கப்பட்டிருந்ததை கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து கடவந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் தெரிவித்தனர். இதையடுத்து விடுதியில் உள்ள பெண்கள் எர்ணாகுளம் நகர மகளிர் காவல் நிலையத்தை நாடினர்.

கடந்த புதன்கிழமையன்று குளியலறையில் இருந்த ரகசிய கேமராவை பெண் பார்த்துவிட்டு, உடனடியாக தனது அறையில் உள்ள தோழிகளிடம் கூறியுள்ளார். அனைவரும் விடுதி உரிமையாளரிடம் தட்டிக்கேட்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் திரும்பி வருவதற்குள் குளியலறையில் இருந்த கேமரா மாயமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி