மாரடைப்பால் மணமகன் உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்

82423பார்த்தது
மாரடைப்பால் மணமகன் உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆஷிஷ் குமார் (30) என்பவருக்கும், பாட்னாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து 17ம் தேதி வரவேற்பு விழா நடந்துள்ளது. அதன் பிறகு ஆஷிஷ் அவரது அறைக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் ஆஷிஷை குடும்பத்தினர் எழுப்பினர், ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி