"குட் பேட் அக்லி" இரண்டாம்கட்ட படப்பிடிப்பு

78பார்த்தது
"குட் பேட் அக்லி" இரண்டாம்கட்ட படப்பிடிப்பு
அஜித்தின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, "குட் பேட் அக்லி" படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி