இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாஸான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் அஜித் அமர்ந்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.