ஆகஸ்ட் 13ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்த நிலையில் இன்று கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5370க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.