2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதலிலே தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 47,280 ரூபாயாக இருந்த தங்கம் விலை 2024 ஆம் ஆண்டு இறுதியில் 56,880 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 12 மாதங்களில் மட்டும் தங்கம் விலை ரூ. 9,600 வரை அதிகரித்துள்ளது. இன்று கிராம் விலை ரூ.7,110 விற்கப்படுகிறது. அதாவது, கடந்த ஓரே ஆண்டில் 1 கிராம் ரூ.1,200 ஆகவும், ஒரு சவரன் ரூ.9,600ம் அதிகரித்துள்ளது.