தங்கம் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்வு

79பார்த்தது
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்வு
சென்னையில் இன்று (மே 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.54,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.92.50-க்கும், 8 கிராம் ரூ.740-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வந்து, சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்து விற்பனை ஆனது. இந்த நிலையில், மீண்டும் ஓரிரு நாட்களில் மீண்டும் ரூ.55,000-ஐ எட்டும் நிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி