போனில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதா? - இனி கவலை வேண்டாம்!

13024பார்த்தது
போனில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதா? - இனி கவலை வேண்டாம்!
இன்று அனைத்து ஸ்மார்ட் போன்களும் பெரிய அளவில் மெமரி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்குகின்றன. இருப்பினும், நம்மில் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஸ்டோரரேஜ் வசதி தீர்ந்து போவதுதான். அதிக ஸ்டோரேஜ் காரணமாக சில நேரங்களில் போன் செயலிழந்துவிடும், பல செயலிகள் சரியாக வேலை செய்யாது, மொத்தத்தில் போனில் உள்ள அனைத்தும் வேகம் குறையும். போனில் உள்ள ஸ்டோரேஜை பயனுள்ள வகையில் மாற்றவும், வேகம் குறைவதை தடுக்கவும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். * உங்கள் போன் எவ்வளவு ஸ்டோரேஜ் உறுதியளித்தாலும், அதில் கூடுதல் மெமரி கார்டை பேக்கப்பாக வைத்திருப்பது நல்லது. *குறைவாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது தேவையற்ற செயலிகளை நீக்கவும். * Google Photos அல்லது Dropbox போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்தி படங்களையும் வீடியோக்களையும் காப்புப் பிரதி எடுக்கவும். மேலும் போனில் உள்ள கூகுள் பைல்ஸ் செயலியை தேர்ந்தெடுத்து தேவையில்லாத பெரிய கோப்புகளை நீக்கவும். * பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும். பதிலாக Spotify அல்லது Gana போன்ற செயலிகள் மூலம் கேட்க முயற்சிக்கவும். இது மொபைலில் சிறிது சேமிப்பிடத்தை வழங்கும். * WhatsApp சென்று Settings சென்று Storage என்பதில் கிளிக் செய்திடவும். தேவையற்ற சாட்டிங் மற்றும் குழு மீடியாவை கண்டுபிடித்து நீக்கவும்.

தொடர்புடைய செய்தி