செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்..?

535பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்..?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நேற்று (மே 15) விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜாமீன் மனுவை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது போல் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி