பார்ட்டியில் கொக்கைன் சப்ளை.. கமல்ஹாசனுக்கு வந்த புதிய சிக்கல்!

57பார்த்தது
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திரையுலகினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கொக்கைன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள அவர், 'கமல்ஹாசன் தனது பார்ட்டிகளில் கொக்கைன் பயன்படுத்துவதாக சமீபத்தில் பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார். போதைப்பொருளின் பிடியில் தமிழ் திரையுலகம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சுசித்ரா கூறியது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். தவறான தகவல் தெரிவித்திருந்தால் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் கமல்ஹாசன் விசாரிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி வீடியோ: ஜனம் டிவி

தொடர்புடைய செய்தி