கிருஷ்ணகிரி: தூர்வாசனூரைச் சேர்ந்த மூர்த்தியின் 17 வயது மகள் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தர்மபுரி பாலக்கோட்டில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கும் இவரது அண்ணனுக்கும் செல்போனில் கேம் விளையாடுவதற்காக சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த சிறுமி நேற்று (செப்., 30) மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.