இயக்குனர் வெங்கட்
பிரபு இயக்கத்தில் நடிகர்
விஜய் நடித்து வரும் "
தளபதி 68" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நடிகர்
விஜய் படங்களின் அப்டேட்டுகள் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு
தளபதி 68 படத்தின் அப்டேட் வருமா, வராதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்து வந்த நிலையில், படக்குழுவின் இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.