போலீசாரை மோதிவிட்டு கஞ்சாவுடன் பைக்கில் எஸ்கேப் ஆன கும்பல்

80பார்த்தது
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இளைஞர்கள் சிலர் கஞ்சாவை கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரிட்ஜ் சென்டர் சோதனைச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த வழியாக கஞ்சாவுடன் இளைஞர்கள் சென்ற பைக்கை போலீஸ் ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால், அந்த இளைஞர்கள், போலீஸ் மீது மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி