கேரளாவின் கொல்லம் வடக்கேவிலாவில் கர்ப்பிணி குதிரையை உள்ளூர் இளைஞர்கள் கும்பல் இரக்கமின்றி அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷானவாஸ் என்பவருக்குச் சொந்தமான நான்கரை வயதுடைய தியா என்ற குதிரை கடந்த வியாழக்கிழமை கொடூரமான முறையில் தாக்கப்பட்டது. குதிரையின் மார்பு, கால்களில் கடுமையான வீக்கமும், அதன் கண்கள், முகத்திற்கு மேல் காயங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.