சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின் நிர்வாகிகளை அழைத்து ஒரு மனதாக தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் குறித்து தவெக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை வழங்கினார்.