டாடாவுக்குச் சொந்தமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன் பயணிகளின் வசதிக்காக, சர்வதேச விமானங்களில் புதிய வகை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணத்தின் போது முதல் 20 நிமிடங்களுக்கு இலவச Wi-Fi சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய சேவை வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் இதுதான்.