கள்ளச்சாராய விவாகரம் - உயர்மட்ட அளவில் விசாரணை

57பார்த்தது
கள்ளச்சாராய விவாகரம் - உயர்மட்ட அளவில் விசாரணை
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருப்பதற்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து டிஜிபி ஷங்கர் ஜிவால் கூறுகையில், “கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மூத்த போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயர்மட்ட அளவில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி