விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இதனால், அங்கு 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றுகிறார். அந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படக் கூடாது என மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்பவருடன் தவெக சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மாநாட்டின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.