சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

53பார்த்தது
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் இன்று சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மாலை கட்டும் பூக்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் திங்கட்கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லைப்பூ ரூ.500க்கும், ஜாதிப்பூ ரூ.500க்கும், ரோஜா ரூ.170-க்கும், செண்டுமல்லி ரூ.90 முதல் ரூ120 வரையிலும், செவ்வந்தி ரூ.80 முதல் ரூ200 வரையிலும், சம்பங்கி ரூ.200 முதல் 250 வரையிலும், கோழிக்கொண்டை ரூ.100-க்கும், அரளி பூ ரூ.200-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும், மரிக்கொழுந்து ரூ.90க்கும், காக்கரட்டான் ரூ.450-க்கும், விருச்சிப் பூ ரூ.120-க்கும், பட்டன் ரோஸ் ரூ.200க்கும், தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி