தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

63பார்த்தது
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!
வங்கக் கடலில் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் குறிப்பிட்ட சில நாட்களுக்கு அமல்படுத்தப்படும். அந்த வகையில், இன்று (15 ஏப்ரல்) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் முட்டை அழிக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. இதனை அடுத்து
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி