அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு!

29540பார்த்தது
கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை உள்பட பாஜகவினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று அண்ணாமலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினருடனும் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி