திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.19 கோடி உண்டியல் வருவாய்

82பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.19 கோடி உண்டியல் வருவாய்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவா் ரா.அருள்முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கம் ரூ.4 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 240, தங்கம் 2,300 கிராம், வெள்ளி 46,000 கிராம், 613 ஆயிரம் கிராம் பித்தளை, செம்பு 7700 கிராம், 781 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.

உண்டியல் எண்ணும் பணியில் இணை ஆணையா் மு.கார்த்திக், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், பொதுமக்கள், திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி