தமிழக மீனவர்கள் குறித்து மக்களவையில் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ, “தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு, செயல்படுகிறதா?. கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இந்த பிரச்சனை முன்பை விட மோசமான நிலையை அடைந்திருப்பதால் மத்திய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்” என்றார்.