திரைப்பட தயாரிப்பாளர் ராமநாதன் காலமானார்

63பார்த்தது
திரைப்பட தயாரிப்பாளர் ராமநாதன் காலமானார்
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ராமநாதன் (72) காலமானார். சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய ராமநாதன், இன்று(ஏப்.07) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் மற்றும் விஜயகாந்தின் தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட படங்களை ராமநாதன் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி