பாலியல் புகாரில் சினிமா பிரபலம் கைது

7386பார்த்தது
பாலியல் புகாரில் சினிமா பிரபலம் கைது
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ்அயனம்பாக்கத்தில் சினிமா பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமான இவர், அதனை மறைத்து தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். பின்னர் குளிர் பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த அந்த பெண்ணிற்கு சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைத்துள்ளார். மேலும் பாலியல் தொல்லை வீடியோவை இணையத்தில் கசிய விடுவேன் என மிரட்டி பணமும் பறித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முகமது அலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி