உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம், டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் கணக்குகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் கணக்குகளை கண்டறிந்து முடக்கியுள்ளது. நிதி மோசடி தொடர்பாக இதுவரை பெறப்பட்ட 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ.3,431 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நவம்பர் 15-ம் தேதி வரை 6.62 லட்சம் சிம்கார்டுகள் 1.32 லட்சம் IMEI நம்பர்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.