போதைப்பொருள் பயன்படுத்தியதோடு ஐடி ஊழியர்கள், சினிமா பிரபலங்கள், இளைஞர்களுக்கு விற்றதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் (26) உட்பட அவரது நண்பர்கள் ஏழு பேரை சென்னை ஜெ.ஜெ. நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஏழு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று (டிச. 04) ஆஜர்படுத்தப்பட்டனர்.