அரை கிலோ மலை பூண்டை தோல் நீக்கி குக்கரில் சேர்க்கவும். இதனுடன் அரை லிட்டர் பால் சேர்த்து குழையும் அளவிற்கு வேக வைத்து, பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். கடாயில் வாணலி வைத்து அரைத்த பூண்டு பேஸ்ட், கரைத்து வடிகட்டிய கருப்பட்டி, 100 மில்லி நல்லெண்ணெய், 50 மில்லி நெய் சேர்த்து கிளறவும். லேகியம் பதம் வந்தவுடன் இறக்கி காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இதை பிரசவமான பெண்கள், வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும்.