சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் 'பவர் ஸ்டார்' ஸ்ரீனிவாசன் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளார். 'லத்திகா' படம் மூலம் அறிமுகமான பவர் ஸ்டார், தமிழில் 'கண்ணா லட்டு திண்ண ஆசையா', 'மனிதன்', 'ஐ' என பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.