பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி

54பார்த்தது
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி
ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற ஆணாக மாறியுள்ளார். அவரது பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி